அட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரவேற்பு நிகழ்வு

 

க.கிஷாந்தன்

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 23.08.2020 அன்று மதியம் அட்டன் நகரில் நடைபெற்றது.

அட்டன் மல்லியப்பு சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் அட்டன் நகர பிரதான வீதியின் வழியாக மணிக்கூட்டு சந்தியை வந்தடைந்து அங்கு பொது கூட்டம் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொது மக்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்றனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்