மக்கள் சேவைக்காக கல்முனையில் திறக்கப்படுகிறது தேசிய காங்கிரஸ் காரியாலயம்

 

 

நூருல் ஹுதா உமர்

தேசிய காங்கிரசின் கல்முனை பிராந்திய மக்கள் சேவைக்கான தேர்தல் காரியாலயம் தினமும் மாலை 6.45 முதல் 11.00 வரை திறந்திருக்கும் என தேசிய காங்கிரசின் பொதுத்தேர்தல் வேட்பாளரும் அக்கட்சியினால் கல்முனைக்கான தலைவராக அடையாளப்படுத்தப்பட்டவருமான றிசாத் செரீப் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் தேசிய காங்கிரஸினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மற்றும் பாலமுனை பிரகடனத்தை வெற்றிகொள்ளும் நோக்கிலும் மக்களின் குறைகளை அடையாளம் கண்டு தீர்த்துவைக்கும் நோக்கிலும் இக்காரியாலயம் தொடர்ந்தும் இயங்க உள்ளது. இக்காரியாலயத்திற்கு நேரடியாக விஜயம் செய்து மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தயாராக உள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்