சசிகலா சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு! சிவாஜிலிங்கம்

 

 

எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நடந்து முடிந்த தேர்தலில் மிக இலட்சக்கணக்கான வாக்காளர்களை கொண்ட பல மாவட்டங்களின் இறுதி முடிவுகள் கூட மிக விரைவாக வெளியிடப்பட்டிருந்தது.

இருப்பினும் 5 இலட்சத்தில் 71 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே 4 இலட்சத்திற்கு குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலே, பிற்பகல் பொழுதிற்குள் அனைத்து வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் கூட முடிவுகளை அறிவிப்பதில் தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு நடந்துள்ளது.

இது தெரிவத்தாட்சி அலுவலகர் உட்பட பலருக்கும், அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து ஏதோ ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை எங்களால் உணரக்கூடியதாக இருந்தது. இதற்கு எங்களிடம் பல சாட்சிகள் உள்ளன. அந்த சாட்சிகளை தகுந்த நேரத்தில் வெளியிடுவோம்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்