60 வெள்ளையர்களைச் சாய்த்த கற்பூரப் புல்வெளியில், பண்டார வன்னியன்

 

விஜயரத்தினம் சரவணன்
25.08

இன்றைய நாள் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை வெற்றிகொண்ட 217ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகளழ்வுகள் பல இடங்களிலும் இடம்பெறுகின்றது.

இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பண்டார வன்னியன் தனது ஒரே வாள் வீச்சில் 60வெள்ளையர்களைச் சாய்த்த இடமான, முள்ளியவளை தெற்கு, 7ஆம் கட்டை, கயட்டையடி கற்பூரப் புல்வெளியில் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த இடத்தில் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், சமூக ஆரவலர் ப.சுபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.