3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

 

 

ஏனைய சில கட்சிகளின் உதவியுன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற பொதுத்தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 5 ஆசனங்களே குறித்த கட்சிக்கு தேவைப்படுகின்றது.

எனவே அதனை தனக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து 3/2பெரும்பான்மையை இலகுவாக பெற்று ஆட்சியமைக்கும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்