பண்டாரவன்னியனின் 217ஆவது வெற்றி நாளினை நினைவுகூர்ந்த ரவிகரன்

 


விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 217ஆம் ஆண்டு வெற்றி நாளினை, 25.08.2020 இன்றைய நாள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நினைவு கூர்ந்தார்.

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா - லோகேஸ்வரன், மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, ஓய்வுபெற்ற கிராம அலுவலர் ப.தெய்வேந்திரம், சமூக ஆரவலர் ப.சுபாகரன் ஆகியோருடன் பெருந்திரளான மக்களும் இந்த வெற்றிநாள் நினைவுகூரலில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்