இடைநடுவில் விலகிய மங்கள சமரவீரவுக்கு 2097 வாக்கு! எப்படி?

 

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்து, பின்னர் இடைநடுவில் விலகிக்கொண்ட, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2097 வாக்குகளை பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களின், விருப்பு வாக்குகளின் விபரம் வெளியாகியுள்ள நிலையிலேயே, மங்கள சமரவீர பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரமும் வெளியாகியுள்ளது.