2020 ல் மாகாண சபை தேர்தல் இல்லை - மஹிந்த திட்டவட்டம்

 


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவி காலம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நிறைவுப்பெறும். ஆகவே மாகாண சபை தேர்தலை இவ்வருட இறுதியில் நடத்துவது சாத்தியமற்றது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும். புதிய பாராளுமன்றம் கூடியவுடன் முன்டினெடுக்க வேண்டிய முக்கிய விடயங்களுக்கு இம்மாதம் முழுவதும் சென்று விடும்.

மாகாணசபை தேர்தல் நடத்தும் போது பல சட்ட சிக்கல்கள் தேர்தல் திருத்த முறைமையின் ஊடாக ஏற்படும் இவ்வாறான நிலையில் தேர்தல்ள் ஆணைக்குழுவின்பதவி காலம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவுப் பெறும்.

ஆகவே தவறுகளை திருத்திக் கொள்ளாமல் மாகாண சபை தேர்தலை வருட இறுதியில் ஒருபோதும் நடத்த முடியாது என்றும் கூறினார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்