இரவு வேளை சம்பந்தனை சந்தித்த சுவிஸ் தூதுவர்!

 


சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் இன்று (28) திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் சம்பந்தமாகவும் அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும்,

விசேடமாக இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தல் சம்பந்தமாகவும் தேர்தலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட இருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாகவும் அரசியலமைப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்