கூட்டமைப்பில் சிங்கள வேட்பாளர்! வெடித்தது சர்ச்சை! இரகசியங்கள் அம்பலம்

 


மட்டக்களப்பு பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமங்களரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் விகாரை அமைப்பதற்காகவேண்டி சென்றிருந்த நிலையில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாணக்கிய ராகுல புத்திர தலையிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களை கலைந்து செல்லச் செய்தார்.

உண்மையில் அங்கு இடம்பெற்றது சாணக்கியாவின் ஒரு அரசியல் நாடகமே..

தேரர் வருவது தனக்கு முன்னர் தெரியும் எனக் கூறும் சாணக்கிய ராகுல புத்திர ஏன் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்யவில்லை சட்டத்தின் படி அப்படி செய்திருந்தால் குழப்பம் ஏற்படலாம் எனக் கருதி பொலிசார் இதனை தடுத்திருக்க வாய்ப்பு இருந்ததே அதனை ஏன் பயன்படுத்தாமல் மக்கள் மத்தியில் வீராப்பு பேசுவது எதற்காக அரசியலிற்காகவே என சம்பவத்தின் பின்னர் மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.

சாணக்கியா தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்வதற்காக பௌத்த பிக்குவை வைத்து நடத்திய அரசியல் நாடகமே இன்றைய மட்டக்களப்பு சம்பவம்.

மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையை தோற்றுவித்து தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள சாணக்கியா முயன்றிருக்கின்றார்.

குறித்த சம்பவத்தில் தேரர் மக்கள் மத்தியில் தெளிவாகக் கூறுகின்றார். சாணக்கிய ராகுல புத்திரவை எனக்குத் தெரியும். மஹிந்த ராஜபக்சவுடன் அவர என்னை வந்து சந்தித்திருக்கின்றார். நான் அவரை நன்கு அறிவேன். இதுவரையில் எங்களது நட்பு தொடர்கிறது என கூறுகின்றார்.

மேலும், பௌத்த பிக்கு பேச முயலும் போது இடையே குறுக்கிட்ட சாணக்கியா அவரை பேச விடாமல் ஏதேதோ சொல்லித் தடுத்து இளைஞர்களை வெளியேற்றியிருக்கிறார்.

அதாவது தனது உண்மை முகம் எங்கு மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்பட்டு விடுமோ என்ற பயம் சாணக்கியனுக்கு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் சாணக்கியா போட்டியிட்டாலும் பிறப்பால் அவர் ஒரு சிங்களவர், பௌத்த மதத்தவர்.

இற்றை வரையிலும் மங்களராம விகாரைக்கு பௌர்ணமி தினங்களில் சென்று குறித்த பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதம் வாங்கி வருகின்றார்.

தனது வாக்கு வங்கியை அதிகரிக்க பௌத்த பிக்குவை ஆயுதமாக பயன்படுத்தி குழப்பத்தை விளைவிக்க முயன்றிருக்கின்றார் சாணக்கிய ராகுல புத்திர.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய பலர் இருக்கும்போதே இவ்வாறான ஒரு சில புல்லுருவிகளை தேர்தலில் களமிறக்குவது எதிர்கால தமிழர்களின் நலனை கேள்விக்குறியாக்கும்.

தனது அரசியல் இலாபத்திற்காக மக்களை விலை பேசுகிறார் இந்த சாணக்கியா. அவரது உண்மை முகம் எங்கே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் தேரர் சொல்ல வருவதை தடுத்து அங்கு குழுமியிருந்த இளைஞர்களை வெளியேற்றுகின்றார்.

அந்த இடத்தில் பிக்கு விகாரை அமைப்பதாக தெரிவித்து நடந்து கொண்ட விதம் பிழையாக இருந்தாலும், அதற்கு முழு காரண கர்த்தா இந்த சாணக்கியாவே. இவ்வாறான வேடதாரிகளை மக்கள் நிராகரிப்பதோடு, கூட்டமைப்பும் இவர்கள் போன்றோர்களை வெளியேற்றி உண்மையானர்வகளுக்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

இதற்கு முதல் ஒரு சமயம், பொன்டுகள்சேனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியிருப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், சாணக்கிய ராகுல புத்திர அவர்களும் வாழத்தானே வேண்டும். அதில் நமக்கென்ன என பேசியிருக்கின்றார். இதன்காரணமாக பல இளைஞர்கள் அவரை விட்டு விலகிச் சென்றிருக்கின்றார்கள்.

இதேவேளை தமிழர்களின் பாரம்பரிய இடமான பட்டிருப்புத் தொகுதியை இவரது பிரசன்னத்தின் காரணமாக எதிர்காலத்தில் இழக்கக்கூடிய சூழல் ஏற்படும்.

அங்கு விகாரைகள் அமைக்கப்படலாம். சிங்கள குடியேற்றங்கள் முழைக்கலாம். எனவே இவ்வாறானவர்களை முளையிலேயே கிள்ளி விடுவது நல்லது.

இது தேர்தல் காலம் எனவே சிந்தித்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

சாணக்கிய ராகுல புத்திரா யார் இவரின் எதிர்கால திட்டம் என்ன கிழக்கு தொல்பொருள் செயலணிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு..!! என்பவை தொடர்பான அனைத்தும் வெகு விரைவில் ஆதாரங்களுடன் நிருபிக்கப் படும், என மட்டக்களப்பு மாவட்ட அரசு சிவில் நிர்வாக சேவை ஓய்வு நிலை அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவிற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்