புலிகள் அழித்த வடக்கை மீள கட்டி எழுப்புகிறோம் – சவேந்திர


விடுதலைப் புலிகளால் அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி வருவதாக இராணுவ கட்டளை தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்றையதினம் (18) புங்குடுதீவில் வீடுகள் கையளிப்பு நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“தற்பொழுது இலங்கையில் கொரோனா நோய் முற்றாக நீங்கி விடவில்லை. நான் வடக்கு மக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” – என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்