இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் நான் – இம்ரான் மஹ்ரூப்

 ஹஸ்பர் ஏ ஹலீம்

இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் நான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கோமரங்கடவல பிரதேசத்தில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தற்போது எமது நாட்டில் வாக்குகளை பெரும் ஆயுதமாகவும் வியாபார உத்தியாக்கவுமே இனவாதம் பயன்படுத்தப்படுகிறது.ராஜபக்ஸ சகோதரர்களால் எமது நாட்டில் அரசியல் நோக்கத்துக்காக பரப்பப்பட்ட இனவாதம் இன்று நாம் ஒருவரை ஒருவர் சந்தேக கண் கொண்டு பார்க்கவைத்திருக்கிறது

சுமார் இருபது ,இருபத்தைந்து வருடங்கள் முன் நாம் இங்கு எவ்வாறு ஒற்றுமையாக இருந்தோம் என எமது பெற்றோர்கள் கூறி கேட்டிருப்போம். எனது தந்தை முஸ்லிம் பிரதேசங்களில் என்ன அபிவிருத்தி செய்தாரோ அதையே தமிழ் பிரதேசங்களிலும் செய்தார், அதையே சிங்கள பிரதேசங்களிலும் செய்தார்.

அன்று எம் மத்தியில் இனவாதம் இருக்கவில்லை. கட்சி வேறுபாடு மாத்திரமே காணப்பட்டது. அதுவும் தேர்தல் காலங்களில் மட்டும். அன்று எனது தந்தை உங்கள் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்தி போன்றே எனது குறுகிய கால அரசியல் பயணத்திலும் உங்கள் பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது தந்தையின் அரசியல் பயணம் எவ்வாறு காணப்பட்டதோ அது போன்றே நானும் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன். எனக்கு வாக்களித்த மக்களுக்காக இன மத பிரதேச வேறுபாடுகளை தாண்டி எனது அபிவிருத்தி பணிகள் தொடரும் என தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்