றிசாத் பதியுதீன் தோற்கடிக்கப்பட்டால் முஸ்லீம் சமூகம் தோற்றுவிடும் - ரவுப் ஹக்கீம்

 


புதிய குரல் வன்னி நிருபர் சாந்தன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் இம்முறை வெற்றிபெற வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொன்டு உரையாற்றும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவௌவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஏன் அவர் வெல்லவேண்டும் என்றால், இந்த ஆட்சியாளர்கள் முஸ்லீம் தலைவர்களை தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்வதற்கு வரிந்துகட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார்கள்.

றிசாத்தை தோற்கடிப்பதன் மூலம் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி முஸ்லிம் சமூகத்தை தோற்கடித்து விட்டோம் என்று இந்த ஆட்சியாளர்கள் இறுமாப்புடன் கதைப்பதற்கும், கர்வத்துடன் கதைப்பதற்கும் எந்தவொரு முஸ்லிம் காங்கிரஸ் போராளியும் இடமளிக்க கூடாது.

இங்குதான் நாம் எமது பெருந்தன்மையினை காட்டவேண்டும் எங்களுக்குகிடையில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்