பாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்ப மக்கள்அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்க.கிஷாந்தன்

 

பாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்டத்தில் வாழும் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

 

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமது அரசியல் வாழ்வில் 30 வருடத்தை பூர்த்தி செய்துள்ளமையை முன்னிட்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டி வாழ் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி நகரில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட தமிழ் வேட்பாளர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார். இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகே மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

 

" கண்டி மாவட்டத்தில் எனக்கு வாக்களிக்கும், வாக்காளர்கள் இரண்டாவது விருப்பு வாக்கை பாரத் அருள்சாமிக்கி வழங்கி அவரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நான் சரியில்லையென உங்களுக்கு தோன்றினால் பாரத்துக்கு மட்டுமாவது வாக்களியுங்கள்.

 

கண்டி மாவட்டத்திலிருந்து தமிழ் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றம் செல்லவேண்டும். பாரத்தின் தந்தையான அமரர் அருள்சாமி கண்டி மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்துள்ளார். இதன்காரணமாகவே அவரின் மகனை கொண்டுவந்துள்ளோம். அவரை நிச்சயம் வெற்றிபெறவைக்கவேண்டும்.. நாவலப்பிட்டிய தொகுதியில் அவருக்கு அதிக வாக்குகள் அளிக்கப்படவேண்டும்." - என்றார்.