வீட்டுக்கு சென்று ரணிலிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட சீ.ஐ.டியினர்

NewsCurry on Twitter: "Ranil Wickramasinghe Told To Seek Career As ...

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமான விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் இன்று கொழும்பில் உள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற இன்று திகதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய அவரது இல்லத்திற்கு சென்ற குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் வக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் வாக்கு மூலம் பெறப்பட உள்ளது.