சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சி செய்கிறார்

 


நாடாளுமன்ற வேட்பாளர் சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சி நடத்துகிறார் என்று வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

திருகோணமலையில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“சுமந்திரனைச் சூழ 20 விசேட அதிரடிப் படையினருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க இராணுவ ஆட்சி என்று சொல்லுமளவுக்கு இவரே செயற்படுகிறார். இந்நிலையில் இராணுவ ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது நகைச்சுவையாக இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ள போதிலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எவ்வித கூட்டங்களையும் நடத்த முடியாமல் பலவீனமாக இருக்கின்றது.

மதுபானசாலைகளை நடத்துபவர்கள் வீட்டுச் சின்னத்திலேயே அதிகளவில் போட்டியிடுகின்றார்கள் என்றும் இவ்வாறானவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவைசெய்யப் போகின்றார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்