அம்பாறையில் டெலிபோனுக்கு இரண்டு ஆசனங்கள்; ஹரீஸ், நசீருக்கு வாய்ப்பு - புலனாய்வு தகவல்


அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு சிங்கள பிரதிநிதிகள் மூவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் தொடர்பில் ஆராய்வு செய்யும் புலனாய்வு பிரிவு அரசின் உயர்மட்டங்களுக்கு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இருவர் பொதுஜன பெரமுனவில் இருந்தும் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ளார்.

அவர்கள் உள்ளடங்கலாக டெலிபோன் சின்னத்தில் களமிறங்கியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகக்கு இரண்டு ஆசனங்களே கிடைக்கப்பெறவுள்ளது, ஆனால் 100 க்கு 80 வீதம் முஸ்லிம்கள் வாக்களித்தால் மூன்று ஆசனங்கள் கிடைக்கப்பெறும், கிடைக்கப்பெறும் மூன்று ஆசனங்களில் விருப்பு வாக்கு முறையே, முதலாவதாக எச்.எம்.எம் ஹரீஸ், ஏ.எல். நசீர், மன்சூர் ஆகியோர் இருக்கின்றனர். இவற்றில் முதல் இருவருக்கு வாய்ப்பிருப்பதாக அந்த தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் வாக்களிப்பில் பெருதம்பாலாக   கருணா அல்லது கோடிஸ்வரன் தெரிவாகுவர் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, இருவரில் எவராவது ஒருவர் வெற்றி பெறுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, இறுதியில் தேசிய காங்கிரஸ் கட்சி 19500 தொடக்கம் 23500 வரையான வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 21500 - 26500 வரையான வாக்குகளையும் பெறும் எனவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.