சனக்கூட்டத்தை கண்டு கண் கலங்கிய கருணா அம்மான்

 

 பாறுக் ஷிஹான்

தன்னை நம்பி ஒன்று கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து ஆனந்த கண்ணீருடன் உரையாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள  தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை  வரவேற்று தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் இளைஞர் அமைப்பாளர் யுவராஜ் தலைமையில் பாண்டிருப்பு பகுதியில்  நடாத்தப்பட்ட பிரசார கூட்டம் புதன்கிழமை(22) இரவு இடம்பெற்றது.

இதன் போது அன்டன் பாலசிங்கம் என்பவர் உலக ராஜதந்திரி என குறிப்பிட்டு அவரை இழந்தது தான் தழிழ் இனம் தற்போது வரை மீள எழும்பாமல் இருப்பதற்கு காரணம் என கூறியதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை நிராகரித்து வடகிழக்கில் மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்