யாழில் சட்டவிரோதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப்பிரசுரங்கள்!

 

சமூகத்திற்கு எதிரான சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் சட்டவிரோதக் குழுக்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் எச்சரிக்கை விடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் இன்று (12) பரவலாக ஒட்டப்பட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் சட்டவிரோதக் குழுவான ஆவா குழு உள்ளிட்ட சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NGT என்று உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றினாலேயே மேற்படி எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்