எந்த சிறுபான்மை கட்சிகளும் எங்களது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இல்லை

 


சில்மியா யூசுப்

எந்த சிறுபான்மை கட்சிகளும் எங்களது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜி தெரிவித்தார்.

 எதிர்வரும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்திலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக மொட்டு சின்னத்தில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அந்தவகையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உவைஸ் ஹாஜி உரையாட்டும்போது இவ்வாறு விளக்கமளித்தார்.

" எமது அரசாங்கத்திற்கு வேறு பங்காளிக் கட்சிகள் இல்லை என குறிப்பிடுவதுடன் இதுபற்றி சில சில்லறை கட்சிகள் கூறித்திரிகின்றனர். ஆனால் அவர்கள் எங்களது பங்காளி கட்சிகள் இல்லை என்பதனை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் வினவிய போது போலிகளைக் கண்டு  வாக்காளர்கள் ஏமாற வேண்டாம். 

எதிர் வரும் பொதுத்தேர்தலில் உங்களுடைய பொன்னான வாக்குகளை  எமது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் தொழிலதிபர் றிஸ்லி முஸ்தபா மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் இவர்களை தவிர வேறு எவரும் இல்லை எனவே அம்பாறை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைக்கும் எனவே இதில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

எனவே இதனை கவனத்தில் கொண்டு எமது வாக்குகளை சில்லறை கட்சிகளுக்கு வாக்களிப்பதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

மேலும் உரையாட்டுகையில், சிறந்த ஆளுமையுள்ள இளம் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி எமது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்