தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் கருணாவோடு இணைந்துள்ளனர்

 பாறுக் ஷிஹான்

கருணாவின் வருகையை பெரிதாக கணக்கெடுக்கவில்லை எனினும்   தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தியில் தான்  கருணாவோடு சிலர்  கைகோர்த்து சவால் விடுப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் தாமோதரம் பிரதீவன்  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக   வேட்பாளராக போட்டியிடும் அவர்   கல்முனை பாண்டிருப்பு  பகுதியில் இன்று(15) மதியம்    விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திலேயே 6ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன் .அரசியலுக்கு வரவேண்டும் என்கின்ற எண்ணம் நோக்கம் இருந்ததில்லை மக்களுடைய வேண்டுகோளிற்கும்  கட்சியினுடைய அழைப்பின்  பேரிலும் இந்த தேர்தலில் நான் களமிறங்கியிருக்கின்றேன்.

கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் தமிழர் நலன் சார்ந்த பல விடையங்களில் மனித உரிமை செயற்பாட்டாளராக மனித உரிமைகள் செயற்பாட்டாளராக பல்வேறு பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஈடுபட்டிருக்கின்றேன்.எதிர்காலத்திலும் இந்த விடயங்களில் தொடர்ச்சியாக தேசியம் சார்ந்த சிந்தனையோடு ஈடுபாட்டோடும் இந்த பணிகளில் ஈடுபடுவதற்கு தயாராக இருக்கின்றேன் மூன்று விதமான இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கு என்னை தயார்படுத்தி இருக்கின்றேன் கடந்த காலங்களில்  அதனை செய்திருக்கின்றேன் . எங்களுடைய கலை,கலாச்சாரம் ,எல்லைகள் காப்பாற்றப்படவேண்டும்.நிலம் பாதுகாக்கட வேண்டும் என்ற விடையத்தில் அதிகமாக பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை தொடக்கம் அதிகமாக கல்வி விடையங்களில் என்னை ஈடுபடுத்தி செயற்பட்டிருக்கின்றேன்.


30 வருட காலமாக தேசியத்திற்காய் இழந்து போய் நிற்கும் எம் இனம் எமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் எம் மக்களது வாழ்வாரத்தை உயர்த்துவதற்காக எமது வழங்களை பயன்படுத்தி தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெமழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் கருணாவின் வருகையை பெரிதாக கணக்கெடுக்கவில்லை ஏன் எனில் அம்பாறை மாவட்ட மக்கள் தமிழோடும் தேசியத்தோடும் பின்னி பிணைந்தவர்கள். இருந்தாலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தி கருணாவோடு இங்குள்ளவர்களை கைகோர்க்க வைத்துள்ளது என்பது கசப்பான உண்மை . இந்த விடையங்களை மக்களிடம் எடுத்துரைத்து மீண்டும் தமிழ் தேசியத்தின் பால் மக்களை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த விடயத்தில் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் ஒன்றிணைந்து பயணிக்க தயாராக இருக்கின்றோம்.

கடந்த நல்லாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுகொடுத்து கொண்டு இருந்தது என்ற சர்ச்சைகள் இருந்தாலும் இராஜ தந்திர ரீதியான சில நகர்வுகள் நகர்த்த வேண்டிய தேவைப்பாடு இருந்ததன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் களமிறக்கப்பட்டுள்ள அணைத்து வேட்பாளர்களும் எமது கட்சி ஆசனத்தை பெற்று கொள்வதற்கான முயற்சியில் தனித்தும் சேர்ந்தும் வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றோம் எங்களுக்கிடையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுக துக்கங்களில் பங்கெடுத்திருக்கின்றேன் காரணம் எனது குடும்பத்திலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் பேசி கோரிக்கை  என்ன என்பதனை அறிந்து செயற்பட்டால் அதனை ஏற்க தயாராக இருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் பெற்று கொண்ட ஒரு ஆசனத்தை இம்முறையும் பெறும் . இருந்தாலும் உதிரி கட்சிகள் பல களமிறங்கி வாக்கை சிதைக்கின்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் இறங்கியிருக்கிறார்கள் அதே நேரம் கடந்த காலத்தில் எமது மக்கள் வாக்களிக்கின்ற வீதத்தை அதிகரிப்பதற்கான அத்தனை செயற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என குறிப்பிட்டார்.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்