கருணா, பிள்ளையான் பெயரில் பணம் கறக்கும் கலையரசனின் மருமகன்இலங்கையில் தற்போது கொரோனா ஒரு பக்கம் தன் வேலையை காட்டினாலும் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்திருக்கின்றமை பார்க்க கூடியதொன்றாக இருக்கிறது... ஊடகங்கள் சமூகவலைத்தளங்களிலும் இலங்கையர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இம்முறை தேர்தலுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மக்களின் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்கின்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கத்தான் செய்கிறது.

கிழக்கில் குறிப்பாக மட்டு - அம்பாறை மாவட்டங்களில் கடும் போட்டி நிலவுகிறது. கருணா அம்மான் முதல் முறையாக தனது சொந்த கட்சியில் சுயேற்சையாக களம் இறங்குகிறார். அதே நேரம் பிள்ளையான் சிறையில் இருந்தாலும் இம்முறை தேர்தலில் களம் இறங்குகிறார். மேலும் கூட்டமைப்பு வழக்கம்போல தங்கள் பாணியை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் பிள்ளையான் கட்சிக்கு என குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி தற்போதும் இருக்கத்தான் செய்கிறது. இதனிடையே கருணா அம்மானின் மனைவி அங்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார். மேலும் கருணா அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்குவதோடு சுயேற்சையாக வன்னியும் கால் பதித்துள்ளது அவரது கட்சி.

கள நிலவரங்கள் காரசாரமாக சென்று கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கருணா பற்றிய செய்தி அண்மையில் முழு இலங்கையையும் ஆக்கிரமித்த செய்தியாக பரவியது. 3000 பேரை கொன்ற அந்த செய்தி தற்போது பல விமர்சனங்கள் பட்டிமன்றங்கள் செவ்விகள் என ஊடகங்களால் ஒலி.ஒளிபரப்பப்பட்டு சற்று ஓய்ந்த நிலையில் கருணா- கலையரசன்- அதாவுல்ல இடையிலான அரசியல் பனிப்போர் அம்பாறையில் குறைந்பாடில்லை.

ஆளுக்காள  மாறி மாறி விமர்சனம் செய்தபடியே தங்களது அரசியல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.  இப்படியான அரசியல் நிலவரங்களுக்கு மத்தியில் ஒரு கூட்டம் புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு நூதன முறையில் பணம் கறக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது.

அதாவது குறிப்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட வேப்பையடி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட தருமலிங்கம் புண்ணியமூர்த்தி என்ற ஒரு காவாலி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. குறித்த நபர் தொடர்பாக ஏற்கனவே பல ஊடகங்களில் பண மோசடி தொடர்பாக செய்தி வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது தேர்தல் நேரத்தை சரியாக பயன்படுத்தி இவர் மீண்டும் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. குறித்த புண்ணியமூர்த்தி என்ற காவாலி தான் கருணா அம்மானுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் அம்மானின் இரண்டாவது மனைவி தன்னுடைய மிக நெருங்கி தோழி எனவும் கூறிக்கொண்டு பலரிடம் பணவேட்டையில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. அம்மான் தேர்தலில் வென்றால் உங்களுக்கு அரசாங்க வேலை நிச்சயம் என வாக்குறுதிகளை வழங்கி பணம் சேகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பல கிராமங்களில் இடம்பெறும் அம்மானின் மக்கள் ஒன்றுகூடல்களுக்கு தானே பணம் வழங்குவதாகவும் ஆஸ்திரேலியாவில் தான் ஒரு தொழில் அதிபர் எனவும் இந்த காவாலி பலரை ஏமாற்றியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மான் உட்பட பிள்ளையானும் தன்னுடைய கைக்குள் என கூறிக்கொண்டு பிள்ளையான்- கருணா அம்மான்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு முகநூலில் வலம்வரும் சில (கோ)கேணல்களை அள்ளக்கைகளாக காட்டி மிரட்டி வருவதால் இவர் பற்றி சமூக வளைத்தளங்களில் விழிப்புடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தருமலிங்கம் புண்ணிமூர்த்தி என்ற இந்த காவாலி வேறு யாரும் அல்ல நாவிதன்வெளி பிரதேசத்தில் வசிப்பவரும் அம்பாறை மாவட்டத்தில் கருணாவை கடுமையாக விமர்சித்து கருணாவுக்கு போட்டியாக களம் இறங்கியவருமான கூட்டமைப்பு உறுப்பினரான கலையரசன் என்பவரின் சொந்த மருமகனே ஆவார். குறித்த மூர்த்தி சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் போலி அரசியல் கட்சி ஒன்றை நடாத்தி அதன் மூலமும் பலரை ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டியமை குறிப்பிடத்தக்கது. இலட்சிய தேசிய முன்னணி என்ற போலி கட்சியை உருவாக்கு ஊடகமாநாடு நடத்தி கொக்கட்டுச்சோலையில் உள்ள ரகுநாத் என்கின்ற இன்னுமொரு காவாலியுடன் சேர்ந்து கொள்ளையடித்த பணம் ஏராளம்..

எனவே கிழக்கு வாழ் மக்களே... கருணா பிள்ளையான்... என பல கட்சி முக்கிய ஸ்தர்களின் பெயரை சொல்லி பணம் பறிக்கும் புண்ணியமூர்த்தி போன்ற பகல் கொள்ளையர்களிடம் இருந்து மக்கள் விழிப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்