அமைதியானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த மக்கள் முன்வர வேண்டும் - மனாஸ் மகீன்

 


ஹஸ்பர் ஏ ஹலீம்

நடைபெறவுள்ள பொது தேர்தலில் வாக்காளர்கள் அமைதியானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முன்வர வேண்டும் இதற்காக ஊழல்,இலஞ்சமற்ற அபேட்சகர்களையும் சிந்தித்து மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(CAFFE) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பாளர்களாக கடமைகளில் ஈடுபடவுள்ள திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு கிண்ணியா விசன் மண்டபத்தில் இன்று (27) கெபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம்.ராபில் தலைமையில் இடம் பெற்றது இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைக்கையில் 

பெரும் சவாலான கொவிட்19 கால கட்டத்தில் தேர்தலினை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மொத்தமாக இம் முறை 196 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய 7458 அபேட்சகர்கள் கட்சிகள்,சுயேட்சை குழுக்கள் ஊடாக  களமிறங்கியுள்ளார்கள் . இதில் முன்னால் ஜனாதிபதி இருவர்கள், முன்னால் ஜனாதிபதி பிரதமர்களின் புதல்வர்கள் நால்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளதுடன் பெண் அபேட்சகர்கள் 819 பேர்கள் களமிறக்கப்பட்டாலும் 55 க்கும் குறைந்தவர்களே தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் ஏனையவர்கள் பெயரளவில் சுயேட்சை குழுவில் உள்ளார்கள்.

அதிகமாக வெறுப்பூட்டும் பேச்சுக்கள்,பொய் பிரச்சாரங்கள் அபேட்சகர்களால் இடம் பெற்று வரூவதாக எமது அமைப்புக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகிறது தங்களது வாக்கு வங்கிகளை அதிகரிக்க அபேட்சகர்கள் நாடாளுமன்ற தேர்தல் கூட்டங்களில் இவ்வாறான விடயங்களை முன்னெடுக்கின்றனர் 25 மாவட்டங்களில் 15 பிரதேசங்களில் வன் முறை சம்பவங்கள் தேர்தலின் முன் அதன் பின்பும் தேர்தல் தினத்தனாறும் இடம் பெறலாம் என ஊகிக்கப்பட்டு பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம்  மக்களின் மனங்களில் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக வாக்களிப்பு இடம் பெறுதலும் நேர்மையானவர்களை தெரிவு செய்யவும் முன்வரவேண்டும்.

அபேட்சகர்கள் இலஞ்சம்,ஊழலற்ற பெண்கள் துஷ்பிரயோகம்,சிறுவர் துஷ்பிரயோகம் ,இனவாத அரசியல் போன்றவற்றிலிருந்து இல்லாத நல்லவராக இருப்பவரை மக்கள் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் இதனால் நாட்டு மக்கள் சுபீட்சமான இலக்குகளை அடைய வேண்டும் என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்