முகநூலில் வீரவசனம் பேசுபவர்கள் போராளிகள் அல்லர் - கருணா அம்மான்


பாறுக் ஷிஹான்

முகநூலில் வீரவசனம் பேசுபவர்கள் போராளிகள் அல்லர்.அவர்கள் எதுவித போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள் என கருணா அம்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை நற்பிட்டிமுனை பகுதியில் இடம்பெற்ற தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் நேற்று(30) இரவு  பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்டதாவது

அம்பாறை மாவட்டத்தில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.முகநூலில் வீரவசனம் பேசுபவர்கள் போராளிகள் அல்லர்.அவர்கள் எதுவித போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள்அம்பாறை மாவட்ட மக்கள் தேர்தலில் வாக்களிப்பவர்களில் அனுபவம் உள்ளவர்கள்.எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்  என்ற கருத்திற்கமைய நாம் வென்று கொண்டு தான் இருக்கின்றோம்.மக்கள் யார் பக்கம் என்று எதிர்வரும் தினங்களில்  உறுதியாகும் என தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்