ஹரீஸ் என்பவர் முஸ்லிம்களின் தலைவனாக இருக்க தகுதியற்றவர்

 பாறுக் ஷிஹான்

கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் என்பவர்  கல்முனை முஸ்லிம்களின் தலைவனாக இருக்க தகுதி அற்றவர்.அவருக்கு  கருணா அம்மானினால்   உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிக்கை விட்டிருக்கின்ற  நிலைமை   அவர் அருகதையற்றவர் என்பதை காட்டுவதாக கிழக்கு  மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான  ஜவாத் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  சார்பாக அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  மயில் சின்னத்தில் இலக்கம் 1 இல்  போட்டியிடுகின்ற அவர்  கல்முனையில் அமைந்துள்ள  தனது அலுவலகத்தில் புதன்கிழமை(1) இரவு நடைபெற்ற  விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 மேலும்  அவர் தெரிவித்ததாவது
                                 
தற்போது இருக்கின்ற அரசாங்கம்   சிறுபான்மை பிரதேசங்களில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கான திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் அனர்த்தத்தை  காரணம் காட்டியும்  இராணுவத்தினரை கொண்டு வாக்களார்களுக்கு தொல்லை கொடுப்பதன் முலம் வடகிழக்கில் வாக்களிப்பினை குறைப்பார்கள் .

நாம் இதனை முறியடிக்கும் வகையில் இதற்கு பல திட்டங்களை வகுத்திருக்கின்றோம் . கடந்த முறை பாராளுமன்ற  தேர்தலில்  33ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தோம் இம்முறை 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறுவோம் என்பது எமது நம்பிக்கையாகும்.
தேர்தல் களத்தில் எந்தவொரு  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் மக்களின் முன்  செல்லமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. தற்போது எம்முடன் பல மக்கள் இணைத்து வருகின்றனர் இதன் மூலம் கல்முனை தொகுதி மக்கள் நல்லதொரு மாற்றத்தினை காணமுடியும்.அம்பாறை மாவட்டத்தில் தற்போது களமிறக்கப்பட்டுள்ள கருணா அம்மானுடன் போராடகூடிய தைரியசாலி ஒருவரே கல்முனை முஸ்லிம்களின் எம்.பியாக வருதல் வேண்டும்


தென்கிழக்கு அலகின் தலைநகரம் கல்முனை மாநகரம் ஆகும். சுதந்திரத்துக்கு முந்திய காலம் தொட்டே கல்முனை தலைநகரமாக இருந்து வருகின்றது. ஆனால் இன்று இங்கு கருணா அம்மான் வருகின்றார். அவர் கல்முனையை நசுக்க பார்க்கின்றார். இங்கு தமிழ் தீவிரவாதம் வருகின்றது. பிரதேசவாதம் வளர்கின்றது. இன்றைய இந்த நிலைமைக்கு  கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரே காரணம் ஆவார். தைரியசாலி ஒருவரே கல்முனை முஸ்லிம்களின் தலைவனாக இருக்க முடியும். கருணா அம்மானால் அவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிக்கை விட்டிருக்கின்ற அந்த கோழை மனிதன் கல்முனை முஸ்லிம்களின் தலைவனாக இருக்க அருகதையே அற்றவன்.கருணாவினால்   உயிர் அச்சுறுத்தல் குறித்து  முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்த விடயத்தை பார்த்தால் அவர் இன்னும் சிறுபிள்ளை போல்தான் தெரிகிறது.

கருணாவை  பொறுத்தவரையில் அவரை அந்த அளவிற்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்ற பெரும் கேள்வி இருக்கின்றது.  தமிழ் பாடசாலையிலும் வடக்கிலும் கிழக்கிலும் கல்வி கற்றவன்  என்றவகையில் கருணா அம்மானை  ஏற்றுக்கொண்டவர்கள் அரிதானவர்கள்.அந்த அடிப்படையில் கருணா அம்மான் மீது ஹரீஸ் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். வழமையாக ஹென்றி மகேந்திரன் , ஹரீஸ், கோடீஸ்வரன் இவர்கள் மூவரும் தனியே திட்டமிட்டு முஸ்லிம் சார்ந்த இன ரீதியான விடயங்களை பொய் வதந்திகளை   கூறி மக்களை திசைதிருப்ப முயல்வார்கள் . முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை இவர்கள் சொல்லிக் கொள்வது போல அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இது வழமையான அரசியல் சித்தாட்டம் இதைப் பற்றி மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை .

எந்த இனம் ரீதியாக ஒருவர் பாராளுமன்றத்திறகு வரவேண்டுமாயின்  அவர் உயிர் அச்சுறுத்தலுக்கு கவலைப்படும் ஒருவராக இருக்க முடியாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை நாங்கள் பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில் வளர்த்தெடுத்து இருந்தோம்.புலிகளினால் வடகிழக்கில் சிறந்த சார்ந்த முஸ்லிம் தமிழ் கட்சிகள் போட்டியிடக்கூடாது என்று பகிரங்க அறிவித்த காலகட்டத்தில் கூட நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றோம். அந்தத் துணிவு இல்லாத ஒருவர் அல்லது உயிர் அச்சுறுத்தல் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒருவரே ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்க வேண்டும்.இவற்றுக்கெல்லாம் ஆச்சப்படுபவர்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்க தகுதியற்றவர்கள்.

நாங்கள் புலிகளுக்கே திரும்ப திரும்ப பாடம் படிப்பித்த வீரர்கள். அப்படி இருக்க இந்த கருணா எங்களுக்கு ஒரு தூசு. தமிழர்கள் ஒரு காலத்தில் வேட்டியை அவிழ்த்து எங்களுக்கு வணக்கம் சொன்னார்கள். ஆனால் இன்று வேட்டியை மடித்து கட்டி கொண்டு அடிக்க வருகின்றனர். பிரதேச சபை பிரச்சினை இங்கு இருக்கின்றது. பிரதேச செயலக பிரச்சினை இங்கு இருக்கின்றது. கல்முனை மண் நிச்சயம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காகவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். அப்புனித பணியில் எனது உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

சஹ்ரானை பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது மு. கா எம். பிகள் நால்வர் அங்கு தூங்கி கொண்டிருந்தனர். அவர்களில் கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் கும்பகர்ணனையும் மிஞ்சி விட்டார். ஆனால் அப்போது அங்கு எழுந்து நின்று எந்த குற்றமும் செய்யாத எனது சமூகத்தை விட்டு விடுங்கள்.வேண்டுமானால் என்னை தூக்கில் ஏற்றுங்கள், என்று உருக்கமாக உரையாற்றிய தியாக செம்மல்தான் எமது தலைவர் றிசாத் பதியுதீன். இந்த தலைவனை சேர்ந்தவர்கள் என்று சொல்லி கொள்வதில் எங்களுக்கு தனி பெருமிதம் இருக்கின்றது. இவரை எப்படி என்றாலும் சிறைக்குள் அடைத்து விட வேண்டும் என்று இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப முயற்சிக்கின்றது.

தலைவரின் தம்பிமாரை விசாரித்தனர். கூட்டில் அடைத்தனர். வீட்டில் கண்ணியமாக இருந்த தலைவரின் மனைவியை இரு நாட்கள் விசாரித்து தோல்வி கண்டார்கள். இங்கு இக்கூட்டத்துக்கு வருவதற்கு முதல் நாளும் எமது தலைவரை விசாரித்தனர். தம்பியை பார்க்க சிறைச்சாலைக்கு சென்ற தலைவரை விசாரிக்க வேண்டி இருப்பதாக சொன்னார்கள். இவை சாதாரண விடயங்கள் அல்ல. ஆனால் சஹ்ரான் என்ற ஒருவனை கண்களால்கூட  கண்டது இல்லை என்று தலைவர் எமக்கு சொன்னார். ஆனால் சஹ்ரானுடன் கூட இருந்து தேநீர் குடித்து சாப்பிட்டவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை பற்றி இந்த அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்களை வாங்கி விடலாம். அவர்களுக்கான விலை இருக்கின்றது.

ஆனால் இந்த தலைவனை அவ்விதம் செய்து விட முடியாது. எமது தலைவன் அஷ்ரப்பை போல வளர்கின்றான் என்று கண்டுதான் இந்த தலைவனை கைது செய்ய முயற்சிக்கின்றார்கள். எந்தவிதமான ஊர்ஜிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமலேயே ஒரு தம்பியை உள்ளே வைத்திருக்கின்றனர். மறைந்த தலைவர் மீதும் அன்றைய பேரின சமூகம் இதே பார்வையையே கொண்டிருந்தது. மறைந்த தலைவரையும் இப்படித்தான் ஒரு பயங்கரவாதியாக காட்ட முற்பட்டது. மறைந்த தலைவர் மீது இதே இனவாதத்தைதான் தூவி இருந்தனர்.

காய்த்த மரத்துக்குதான் கல்லெறி விழும்.எமது மரம் காய்த்து இருக்கின்றது. எமது மக்கள் காங்கிரஸ் நிமிர்ந்து நிற்கின்றது. நாளொரு வண்ணமும்  பொழுதொரு மேனியுமாக உயர்ந்து கொண்டிருக்கின்றது. கல்முனை முஸ்லிம்கள் சரியான உணர்வுடன் வாக்களிக்க வேண்டும். கல்முனையின் அபிவிருத்தி ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்ற ஆயிர கணக்கான கோடி ரூபாய்களை பயன்படுத்தாமல் தொடர்ந்தேச்சையாக திருப்பி அனுப்பி வந்திருக்கின்ற அந்த நபரை தோற்கடிக்க வேண்டும். கல்முனையையும் சாய்ந்தமருதையும் சுய இலாபத்துக்காக பலஸ்தீனமும்  இஸ்ரேலும் போல பிரித்து வைத்திருப்பவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
எமது அம்பாறை மாவட்டத்தில் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் சுமார் 35 ஆயிரம் வாக்குகளை பெற்று கொண்டால் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியும் .ஆனால் எதிர்வரும் தேர்தலில் 45 ஆயிரம்  வாக்குகளுக்கு மேல் பெறக்கூடிய நிலை இன்று இருக்கின்றது . இன்னும் இந்த நாட்டில் ஏற்படப்போகும் இனவாத  விஷ்வரூபங்கள் எந்த அளவுக்கு இந்த காட்சியை மேம்படுத்த போகின்றது  என 32 வருட அரசியல் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு நினைக்கின்றேன் என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்