தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்

 


தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும்,அவசரகாலசட்டங்களின் கீழும் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையின் பல சிறைகளில் உள்ளனர் என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்து வருடத்துக்கு மேல் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் உள்ளனர்,24 வருடங்கள் உள்ளவர்களும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைகளில் உள்ள கைதிகள் அல்லது சந்தேகநபர்கள் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்,ஏனையவர்கள் பாதிக்கப்படும் அல்லது வைரஸ் பரவும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என மாவை சேனாதிராசா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக சிறையில் உள்ளவர்களை குடும்பத்தவர்கள் சென்று பார்ப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சிறையில் உள்ளவர்கள் கடுமையான மன அழுத்தம் மற்றும் வேதனைக்கு உட்பட்டுள்ளனர் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சிறைகளில் இருந்த கைதிகள் தற்காலிகமாகவிடுவிக்கப்பட்டு; வீட்டுக்காவலின் கீழ் உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்,நீதிமன்றங்களினால் நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளின் நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ள மாவைசேனாதிராசா அவர்களின் மனோநிலை உளவியல் நிலை குறித்து கவனம் செலுத்துமாறும் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையின் கீழ் அடிப்படை மனித உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்