கொவிட் 19 தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு

 ஹஸ்பர் ஏ ஹலீம்

கொவிட்19 தொடர்பில் திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும் துண்டுப் பிரசுர விநியோகமும் இடம் பெற்றது.

எகட் கரித்தாஸ் நிறுவன ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (18)திருகோணமலையில் உள்ள அலுவலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் கொவிட் 19 பாதுகாப்பு தொடர்பில் துண்டுப்பிரசுரம் வீதிகளில் வைத்து போக்குவரத்து பயணிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு பரவல் சுகாதார நடை முறைகள் சமூக இடைவெளி தொடர்பிலான விளக்கத்தினை டாக்டர் முனாஸ் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இதில் திருமலை மாவட்ட ஊடகர்கள், பொலிஸார்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்