இலக்குவைக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள் - ஐநா ஆணையாளர் கவலை!

 

இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ...

இலங்கையின் சமகால நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44வது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

பல உலக நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தினர் கொரோனா தொற்றுடன் தொடர்புபடுத்தும் குரோத பேச்சுக்களால் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்