நாடு சீர்குலையும்

 ஹஸ்பர் ஏ ஹலீம்


"அரசாங்கம் மூவின மக்களையும் புறக்கணித்து ஜனாதிபதி செயலணி உருவாக்கி தேர்தல் காலத்தில் செயற்படுவது அவசியமானதா? அத்தோடு சிறுபான்மை மக்களை புறக்கணித்து இவர்கள் தேர்தல் காலத்தில் செயற்படுகின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற   உறுப்பினரும் ,முன்னாள்   பிரதி அமைச்சருமான  அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். 

கிண்ணியாவில் நேற்று (17)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: -

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தினால்  அண்மையில்ஏற்படுத்தப்பட்டுள்ள  2 செயலணி படை வீரர்களை கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலும்

ஐந்து படைவீரர்களை கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலும் தொல்பொருள் ஆய்வு தொடர்பான காணிகளை பாதுகாக்கும் தோரணையில்  வடகிழக்கில் காணிகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட  நடைமுறைப்படுத்தப்பட இருக்கும்  செயல் அணியில் சிறுபான்மை சமூகத்தை மிகவும் துன்பத்துக்கு உள்ளாக்கிய அல்லது காலத்திற்கு காலம் அந்தந்த மாவட்டங்களில் செயற்பட்ட மிகவும் இனவாதியாக காணப்பட்ட அரிசி மாலை  காமதூறு மற்றும் சோபித்த  காம துரு போன்றவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயல் அணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

செயலணியின் நியமிக்கப்பட்டவர்கள் ஒரு தமிழரோ அல்லது கிரிஸ்டியனோ அல்லது ஒரு முஸ்லிமா இருக்கவில்லை

இந்நாட்டில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப் படுத்தாமல் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த 11 பேரையும்   இச்செயல் அணியில் நியமிக்கப்பட்டுள்ளது

கிழக்கில் அம்பாறையிலும் திருகோணமலையிலும் நில அபகரிப்புக்கு பட்டுள்ளோம் வடபுலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடந்தேறியுள்ளது தேர்தல் காலத்தில் இவ்வாறானதொரு செயலணி அவசியமா

அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணாக காணப்படுகின்றது

நாம் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம் 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு பிற்பாடு இந்த மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல நாட்டிலுள்ள மக்கள்  சமூக உரிமைக்காக குரலாக ஒலிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பமாக இப்போது தேர்தல் காணப்படுகின்றது

இனவாதிகள் இன்று 70 வருட காலமாக முஸ்லிம் சமூகம் தங்களுடைய மத சார்பான விடயங்களை முன்னெடுக்கின்ற அல்லது அடிப்படை உரிமைகளை மையப்படுத்தி சென்ற அமைப்புகளாக இருக்கின்ற தப்லீக் ஜமாஅத் ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் தவ்ஹீத் ஜமாத் ஜாமியா நளீமியா போன்ற கலா பீடங்கள் தங்களுடைய பணிகளை நீண்ட காலமாக செய்து வருகின்ற போதும் தற்போது இவை அனைத்தும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பேசுகின்றபோது அந்த என்ன வாதிகளை ஒரு கட்டுக்கோப்புக்குள் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி கொண்டுவரவேண்டும்

கடைசி கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறான அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்போம் என்ற போது அவர்கள் மௌனித்து இருந்தார்கள்

பாரா நக்கலாக இடங்களில் வெளியாகி அவர்கள் நாட்டிற்கு சேவை செய்யும் சேவகர்களாக காணப்படுகின்றனர்

இவர்களையெல்லாம் பயங்கரவாதத் தோடு தொடர்புபடுத்தி பேசுகின்றபோது நாட்டு மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடு தோன்றும் இதனை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்

நாம் இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்று கூறி அவர்களும் அல்லர் அதற்காக போராடியவர்கள் அல்லர் ஆனால் இந்த நாட்டினுடைய சகல அரசுகளோடுமா ஒத்துழைத்த ஒரு சமூகம் இன்று மிகக் கேவலமாக சித்தரித்து காண்பிப்பது ஆட்சியாளர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும்

பாராளுமன்றம் என்பது வேறு ஒரு விடயம் ஜனாதிபதி முறைமை என்பது வேறு விடயம் இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காக வேண்டி ஜனாதிபதி இவ்வாறான விடயங்களை  கோருவது ஒரு இந்த நாட்டினுடைய தலைவருக்கு ஒரு கடமையாகும் என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்