மாற்று கட்சியினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு!

 
ஹஸ்பர் ஏ ஹலீம்

நடை பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலினை முன்னிட்டு திருகோணமலையில் தேர்தல் கள நிலவரம் சூடு பிடித்து வருவதுடன் கட்சி மாறும் படலம் தொடங்கியிற்று. மாற்று கட்சியினரை சேர்ந்த பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள்.

குறித்த நிகழ்வு தம்பலகாமம்_சிராஜ் நகர் பகுதியில் இடம் பெற்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை  வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் நேற்று (21)பலர் இணைந்து கொண்டார்கள். சஜீத் பிரேமதாச அணியினை பலப்படுத்தும் நோக்கில் கட்சி மாற்றங்கள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


.இதில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ,தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான எச்.தாலிப் அலி ஹாஜியார்,ஆர்.எம்.றெஜீன்,கிண்ணியா நகர சபை உப தவிசாளர் ஐயூப் நளீம் சப்ரீன்,உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்