முல்லை மீனுவர்களுக்கு அறிவுறுத்தல்

 விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் தொழில்வெகுவாகப் பாதிக்கப்படடுள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தொழில் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு, உரிய திணைக்களங்கள்p, தென்னில்கையிலிருந்து வருகைதரும் மீனவர்களின் சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை உடனடியாகத் தடை செய்யவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 30.05 சனிக்கிழமையன்று, முல்லைத்தீவு - நாயாறு மீனவர்களின், தொழில் பாதிப்புக்களைப் பார்வையிட்டுப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாயாற்றுப் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் இம்முறையும் படையெடுத்துவந்து, அங்குள்ள எங்களுடைய மீனவர்களையும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தினையும் பறித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த 2011ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 72பேர் தொழில் செயவதற்கான அனுமதிதான் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒவ்வொரு வருடமும் 300பேருக்குமேல் இங்கு வந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அவ்வாறு வருகை தருபவர்கள் நாயாறு மற்றும் கொக்குளாய் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்படித்தல், கணவாய்க்கூடு வைத்தல், டைனமெற் இத போன்ற தொழில்களையே அவர்கள் செய்வது வந்தார்கள்.

இதனல் எமது மாவட்டத்தில் சிறு தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாயிருந்தனர்.

இவ்வாண்டு கொரோனாத் தொற்று அபாய நிலை காணப்படுவதால், தென்னிலங்கை மீனவர்களுடைய வருகை இம்முறை இருக்காது என எண்ணியிருந்தோம்.

ஆனால் கிட்டத்தட்ட 1000பேர் வரையில் தென்னிலங்கயிலிருந்து வருகைதந்து நாயாற்றுப் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை அப்பகுதி மீனவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். நாமும் நேரில் சென்று பார்வையிட்டு அதனை உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

இவர்களுக்கன அனுமதிகளை வழங்கியது யார்? நிச்சயமாக இந்த கொரோனாத் தொற்று அபாய நிலைக் காலத்தில் உரிய திணைக்களங்களிடம் அனுமதிகளைப்பெற்று இங்கு வந்தார்களா?

அல்லது திணைக்களங்கள் எல்லாம் சேர்ந்து இவர்களுக்கான நடவடிக்கைகளை இங்கு இலகுவாகச் செய்து கொடுத்து அவர்களை இங்கு அனுப்பி, எங்களுடைய தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நசுக்கும் எண்ணத்துடன் அரசும் சேர்ந்து செயற்படுகின்றதா? என்பதுதான் என்னுடைய கேள்வியாகும்.

நிச்சயமாக இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரைக்குமுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை.

அந்தப் பாதிப்பிலிருந்து நீக்குவதற்கு, அல்லது சட்டவிரோத தொழில்களை தடைசெய்வதற்குரிய நடவடிக்கைகளை, உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் தற்போது கடற்றொழில் அமைச்சராக ஒரு தமிழ் அமைச்சரே இருக்கின்றார். அவர்கூட இது தொடர்பில் சரியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், இச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.
அவர் ஏன் இது தொடர்பில் நடவடிக்கைஎடுக்க தயங்குகின்றார். என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்