தேர்தல் சட்டத்தை உருவாக்குவது நான் அல்ல நாடாளுமன்றமே!

 

பதவியை விட்டு விலகப் போவதாக, மகிந்த ...

இம்முறை தேர்தல் பிரச்சாரங்களின் போது, விருப்பு வாக்கு இலக்கத்தை காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் குறைந்துள்ளமை தொடர்பாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் தேர்தல் ஆணைக்குழு புதிதாக சட்டங்களை அமுல்படுத்தவில்லை எனவும், தேர்தல் சட்டத்தில் உள்ளதை மாத்திரமே அமுல்படுத்தியுள்ளதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த தவறு சட்டத்தின் பிரகாரம் தற்போது திருத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்றால், அவர்கள் மக்களுக்கு சேவையாற்றி இருந்தால் அச்சப்படுவதற்கான காரணங்கள் இல்லை.

பிரபலமில்லாத வேட்பாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து வீடு வீடாக சென்றும், சிறிய கூட்டங்களை நடத்தியும் பிரசாரங்களை செய்யலாம்.

மாவட்டங்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் அடங்கிய பத்திரிகைகளை தேர்தல் ஆணைக்குழு, வாக்காளர்களின் வீடுகளுக்கு விநியோகித்து வருகிறது.

அதேவேளை தேர்தல் ஆணைக்குழு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தேசப்பிரிய, தேர்தல் சட்டங்கள் உட்பட சட்டங்களை உருவாக்குவது தான் அல்ல, நாடாளுமன்றமே அவற்றை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்