மறை மாவட்ட ஆயரை சந்தித்த முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன்ந.குகதர்சன் 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையை மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.

இதன்போது தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் கத்தோலிக்க மக்களின் ஆதரவை எனக்கு பெற்றுத் தருமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரியுள்ள நிலையில் தங்களது ஆதரவு உண்டு என மட்டக்களப்பு மாவட்டத்தின் மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள றோமன் கத்தோலிக்க சமயத்தை சாராத கிறிஸ்தவ மக்களின் ஆதரவைக் கோரி செங்கலடி கிறிஸ்தவ குடும்ப சபையின் போதகர் எஸ்.ஜேசுதாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் போது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தனக்கான ஆதரவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரியுள்ள நிலையில் தங்களது அனைத்து ஆதரவையும் வழங்குவதாக பாராளுமன்ற வேட்பாளர் சீ.யோகேஸ்வரனுக்கு போதகர் எஸ்.ஜேசுதாசன் தெரிவித்தார்.