மக்கள் தொடர்ந்தும் எமக்கு ஆதரவு

 விஜயரத்தினம் சரவணன்


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒரு சில நபர்கள், அல்லது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சில பிரதிநிதிகளின் செயற்பாடுகளைவைத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாகப் பிழைசெய்கின்றது என்று, யாரும் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

கூட்டமைப்பில் உள்ள ஒருசிலரின்கருத்துக்களைக் கூட்டமைப்பின் கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம்.

எனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு தமிழ்மக்கள் தமது ஆதரவுகளை தொடர்ந்தும் வழங்கவேண்டும் என முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - கனகரத்தினபுரம் பகுதியில் 16.06அன்று இடம்பெற்ற தேர்தல்பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக கௌரவமான ஒரு வாழ்க்கையினை ஏற்படுத்தவதற்கும், எங்களுடைய மக்கள் தமது சொந்த இடங்களில் வழ்வதற்காகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பயணித்துக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் குறிப்பாக தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டிற்குப் முன்பும், பிற்பாடும் பெரும்பாலான தமிழ் மக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்துவருகின்றனர்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தமிழர்கள் தனித்துவத்தினையும், தமிழர்களின் தனித்துவமான கட்சியையும் உடைப்பதற்காக, எமது பகுதிகளில் பல தேசியக்கட்சிகளும், சுயேற்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அவர்கள் களமிறக்கப்பட்டிருப்பது வெல்வதற்காக அல்ல. தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவே அவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே நான் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்ளவிரும்புவது யாதெனில், தமிழர்கள் நாங்கள் தனித்துவமாகப் பயணிக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. நிச்சயமாக நாம் ஒரே நிலைப்பாட்டில் இருக்கவேண்டிய பொறுப்பும் இருக்கின்றது.

எமக்கு மக்களால் தரப்பட்ட அங்கீகாரத்தின் அடிப்படையில் எம்மால் முடிந்த பங்களிப்பை நாம் செய்துவருகின்றோம். தொடர்ச்சியாக உங்களுடைய பங்களிப்பும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

அதேவேளை எமது நிலங்கள் பறிபோகாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் எமக்கிருக்கின்றது. ஏன் எனில் எதிர்காலத்திலும் எங்களுடைய மக்கள் அன்னிய சக்திகளின் தலையீடில்லால் வாழக்கூடிய ஒரு களச் சூழலினை நாம் உருவாக்கிக்கொடுக்கவேண்டும். அதற்காகாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைத் தமிழ் மக்கள் பலமடையச் செய்யவேண்டும்.

அதேவேளை கூட்டமைப்பில் புதியவர்கள் உள்வாங்கப்படவேண்டும். எமது மக்கள் மீது அக்கறைகொணடவர்கள் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டு அவர்கள் எமது மக்களை சரியான முறையில் வழிநடத்தவேண்டும்.

மேலும் குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒரு சில நபர்கள், அல்லது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சில பிரதிநிதிகளின் செயற்பாடுகளைவைத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாகப் பிழைசெய்கின்றது. என யாரும் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களினுடைய விடுதலைக்காக உருவாக்கப்பட்டு, அதற்காகவே பயணிக்கின்ற ஓர் ஜனநாயக அமைப்பாகும்.

ஆகவே கூட்டமைப்பில் உள்ள ஒருசிலரின்கருத்துக்களைக் கூட்டமைப்பின் கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம்.

எனவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு தமது ஆதரவுகளை வழங்கவேண்டும் என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்