இனவாத முத்திரை குத்துகிறார்கள்

 
சிறுபான்மை இன சமூகத்தின் அநீதிகளை தட்டிக் கேட்கின்ற போது இனவாத கட்சிகளாக சிறுபான்மை கட்சிகளை பார்க்கின்றனர் இனவாத முத்திரை குத்திவிடுகிறார்கள் அப்படியல்ல என திருகோணமலை மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்று (16)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும்  கருத்து தெரிவிக்கையில் 

எதிர் வரும் தேர்தல் சவால் நிறைந்த தேர்தலொன்றாக முகங்கொடுக்க வேண்டியுள்ளது ஜனநாயக முறையில் தேர்தல் நடாத்தப்படவேண்டும் எல்லோருக்கும் ஒரே நீதியான நிலையான சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் தேசிய கண்காணிப்பு குழு அரச படைகள் உதவியுடன் தேர்தல் ஆணையகம் என்பன இணைந்து சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்கிறோம்.

 3/2 பெரும்பான்மை ஆசனம் பெற வேண்டும் என நினைத்தாலும் அரசாங்கம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற நிலை இல்லாமல் வழிநடாத்த வேண்டும் என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்