குருமார்களின் நல்லாசி

 ந.குகதர்சன்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்துக் குருமார்களின் நல்லாசியினைப் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார். 

 மட்டக்களப்பு மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் குருமார்கள் செங்கலடி ரமேஷ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் வைத்து பூசைகள் இடம்பெற்று பின்னர் தங்களது ஆசியை சீ.யோகேஸ்வரனுக்கு வழங்கினர். இதில் ஆலய தர்மஹர்த்தா சபையினரும் பக்தர்களும் கலந்து கொண்டனர். 

 இதேவேளை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனுக்கு விஜயம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான யோகேஸ்வரன் இராமகிருஷ்ண மிஷன் சுவாமியிடம் ஆசியினைப் பெற்றுக் கொண்டார்.

 அத்தோடு அகில இலங்கை இந்து தர்மோதய தலைவரும், அருட்கவியரசுமான விஸ்வ பிரம்மஸ்ஸ்ரீ வை.இ.சந்திரகாந்தன் குருக்களின் இல்லத்துக்குச் சென்று; அவரிடமும் ஆசியினைப் பெற்றுக் கொண்டார். 

 மேலும் மட்டக்களப்பு கல்லடி காயத்ரி பீடத்திலிருந்து எம்மண்ணில் ஆன்மீகத்தை போதித்து வரும் சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியாரின் ஆசியை கல்லடி காயத்ரி பீடத்துக்குச் சென்று பெற்றுக் கொண்டார். 

 இறுதியாக சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்குச் சென்று அம்பாளைத் தரிசனம்; செய்து அங்குள்ள பூசகர்களிடமும் ஆசியைப் பெற்றுக் கொண்டார்.

 


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்