தொடரும் கொரோனா உயிர்ப்பலிகள்


கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பிரான்சில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் 62 தனித்தனி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்களுக்கு காரணம் என்ன என்பதனை கண்டறியும் பொருட்டு தொடுக்கப்பட்டுள்ள இந்த தனித்தின வழக்குளை ஒற்றை வழக்காக கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை, அரசாங்கம் உட்பட பல்வேறு தரப்புக்களும் இவ்வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதோடு, இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்குழுவொன்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

https://actu.fr/societe/coronavirus/coronavirus-le-parquet-de-paris-ouvre-une-enquete-sur-la-gestion-de-la-crise_34171678.html

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 87 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 296ஆக உயர்வடைந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.