கொவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு

 

பாறுக் ஷிஹான்

கொவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அசாதார நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக   கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாட்டில்  பள்ளிவாசல் நிர்வாகிகள் சங்கங்களை ஒன்றிணைத்து  வியாழக்கிழமை  ( 25) முற்பகல் விழிப்புணர்வு   நிகழ்ச்சி சவளைக்கடை  தாறுல் ஹிக்மா கலாபீட வளாகத்தில் சமூக இடைவெளி பேணலுடன் இடம்பெற்றது.


 இதன் போது அரசாங்கம் மத தலங்களை நிபந்தனைகளோடு  திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பிலும்  கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட  பகுதிகளில் கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பது தொடர்பாக விரிவாக நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு வளவாளர்களாக  கலந்து கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விளக்கமளித்தனர்.


மேலும் குறித்த நிகழ்வில் அப்பகுதியை சேரந்த 25 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் நிர்வாக சபையினர் பங்கேற்றிருந்தனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்