19வது திருத்தச் சட்டம் கேலிக்குரியதாக மாறியுள்ளது: பிரதமர்Govt. shouldn't sign pact with MCC before prez poll - Mahinda

தனிப்பட்ட ரீதியில் தம்மை பழிவாங்குவதற்காக கொண்டு வரப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தற்போது கேலிக்குரிய அரசியலமைப்புச் சட்டமாக மாறியுள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகல் வாரியபொலவில் இன்று மதியம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாற்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற செய்து மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும்.

இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எழுதி கொண்டு வந்தவர்கள், அதனை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். மக்களுக்கு தற்போது என்னை விட அரசியல் நன்றாக தெரியும். அந்த காலத்தில் போன்றல்ல, தற்போது அனைவரும் மிகவும் உணர்வுபூர்வமாக சிறந்த புரிந்துணர்வுடன் இருக்கின்றனர்.

2015 ஆம் ஆண்டு நாங்கள் தோல்வியடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமையை நீங்கள் அறிவீர்கள். இந்த 5 ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்தி முற்றாக ஸ்தம்பித்து போனது. நாங்கள் ஏற்படுத்திய அபிவிருத்தியும் வலுவான பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது.

வலுவிழந்த மற்றும் கடன்பட்ட பொருளாதாரத்தையை எங்களிடம் மீள கையளித்தனர். இதனால், இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம். பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. அனைத்து துறைகளும் கடந்த 5 ஆண்டுகளில் பலவீனமடைந்தன.

வீதியை நிர்மாணிப்பது குளங்களை புனரமைப்பது போன்றவை மாத்திரமல்ல முழு அபிவிருத்தியும் நின்று போனது. அவர்களிடம் இவற்றுக்கான தீர்வுகள் இருக்கவில்லை. குறைந்த காட்டு யானைகளின் பிரச்சினைகளை தீர்க்கவும் அவர்களிடம் நேரம் இருக்கவில்லை.

மனிதர்களுக்கும், யானைகளுக்கு இடையிலான மோதல்களை தடுக்க அவர்களுக்கு சக்தி இருக்கவில்லை. இப்படியான நிலைமையிலேயே நாங்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலை நடத்துகிறோம் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.