Sunday, December 8, 2019

படகு கவிழ்ந்ததில் ஒரு பலி!!!



கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகில் படகு கவிழ்ந்ததில் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இக்பால் இல்ஹாம் (வயது 16) என்பவர் மரணமடைந்துள்ளார்.

இவருடைய சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி வருவதாகவும் இன்று விடுமுறை தினம் என்பதால் இத்தினத்தில் வயல் காவலுக்கு நண்பர்களுடன் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Write comments