Saturday, December 7, 2019

மன்னாரில் மாணவிகளை பலாத்காரம் செய்த வவுனியா நபர்! நீதிமன்றம் கொடுத்த தண்டனை

மன்னார் அடம்பன் பகுதியில் தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிய இரு மாணவிகளை வவுனியா நபர் ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயன்றுள்ளார்.

இந் நிலையில் இரு மாணவிகளும் கிராம மக்களால் காப்பாற்றப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அடம்பன் பகுதியை சேர்ந்த உயர்தரம் கற்கும் இரு மாணவிகள் நேற்று மாலை நேர வகுப்பு முடிவடைந்து வீடு சென்ற வேளை நபர் ஒருவர் மாணவிகளிடம் தகாத விதமாக நடந்து கொண்டதுடன் ஒரு மாணவியை தாக்கி குளத்தில் மூழ்கடிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் மற்றைய மாணவி தப்பித்து சென்று கிராம மக்களின் உதவியுடன் திரும்பிச்சென்று மற்ற மாணவியை மீட்டுள்ளனர்.

கிராம மக்களை பார்த்தவுடன் சந்தேகநபர் குளத்தினூடாக தப்பித்து செல்ல முயன்ற நிலையில் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் பொலிஸார், குறித்த நபரை இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக சட்டத்தரணிகளான டிணேஸன் மற்றும் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் 18 ஆம் திகதி குறித்த சந்தேக நபரை உறுத்திப்படுத்துவதற்கான அடையாள அணிவகுப்பிற்கும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Write comments