Friday, November 1, 2019

அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்த இறக்காமத்தை சேர்ந்த மாணவன் MRM. சாஹீப்


அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் வெண்கலம் வென்றார். 18 வருடங்களின் பின் மகத்தான சாதனை.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த MRM. Saheeb 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான  உயரம் பாய்தல் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இது தனி நிகழ்ச்சி ஒன்றில் அகில இலங்கைரீதியாக பதினெட்டு வருடங்களுக்கு பின் பாடசாலைக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்த வெற்றிக்காக ஆலோசனை, வழிகாட்டலை மேற்கொண்ட பாடசாலையின் அதிபர் MI. ஜாபீர், விளையாட்டு துறைக்கு பொறுப்பான அதிபர் MHM. அபூபக்கர், விளையாட்டுத்துறை பொறுப்பாளர் அலியார் பைஸர், அர்ப்பணிப்புடன் சிறப்பாக பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் MYM. ரகீப், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் AGM. மஸ்பூத் போன்றவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.

No comments:
Write comments