Thursday, November 28, 2019

வெளிநாடு செல்ல பசிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்



முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. 
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக பசில் ராஜபக்‌ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது குறித்த வழக்கு கொழும்பு உயர் மேல்நீதிமன்ற நீதிபதி  கிஹான் குலதுங்க முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது, பசில் ராஜபக்‌ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை மருத்துவ காரணங்களுக்காக தமது தரப்பு மனுதாரரை வெளிநாடு செல்ல அனுமதியளிக்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். 

இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாத நிலையில், குறித்த காலப்பகுதிக்கு பசில் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


No comments:
Write comments