Thursday, November 28, 2019

மழைக்காலம் #வந்தால் #கல்முனை மாநகரத்தில் #வாழும் #தமிழ் #மக்கள் அகதிகளாகின்றனர்.


அனர்த்தங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு கல்முனை மாநகர சபை நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா?

சபையில் மாநகர சபை உறுப்பினர் கௌரவ சப்றாஸ் மன்சூர்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாழும் மக்கள் வழமையாக மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அதிலும் குறிப்பாக இங்கு வாழும் நீலாவனை, சேனைக்குடியிருப்பு மற்றும் துரைவந்தியமேடு கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் இக்காலங்களில் பாடசாலைகள், கோயில்கள் போன்ற இடங்களில் அகதிகளாக சில காலம் தங்கி இருந்து சிரமப்படுவதை நாம் அனைவரும் அறிந்ததே!

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கல்முனை மாநகர சபை அனர்த்த நிவாரண உதவிகளுக்காக பிரத்தியேக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா? இல்லாவிடில் உடனே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகர சபை உறுப்பினர் கௌரவ சப்றாஸ் மன்சூர் அவர்களின் வேண்டுகோளுக்கு கொரவ முதல்வர் ரகீப் அவர்கள் அதற்குறிய நடவடிக்கைகளை சபை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.

No comments:
Write comments