Saturday, November 2, 2019

சஜித்தால் கோத்தபாயவிற்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி


ஜனாதிபதி தேர்தல் ஆரம்பமானது முதல் தினமும் உள்ள கள நிலை குறித்து பசில் தமது நிர்வாகத்தினரை சந்தித்து வருகிறார். அதுபோன்ற ஒரு சந்திப்பு நேற்றும் நடந்தது.

இதுவரை நாம் போட்ட கணக்கு தவறிவிட்டது. அதிக வாய்ப்புகள் மொட்டை விட்டு சென்று விட்டன என நேற்று பசில் தமது சாகாக்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு தேர்தல் கூட்டத்தில் தனது கொள்கைகளை சரியாக முன்வைக்க முடியாத ஒரு அபேட்சகரை வைத்துக் கொண்டு சஜித்துக்கு முன்னாள் நிமிந்து நின்று பார்க்கக் கூட முடியாத நிலை உருவாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோல நமக்கு ஆதரவான படையினர் குறித்து என்னதான் பெருமையாக விளம்பரம் செய்தாலும் படையினரை காட்டிக் கொடுத்த பேச்சின் இழப்பை திரும்ப பெற முடியாததாகிவிட்டது. மக்கள் எமது சுயரூபத்தை புரிந்து கொண்டுள்ளார்கள் என பசில் பேசியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் கிடைத்த ஆதரவை நாம் கிராம புறங்கள் தொட்டு இழந்து வருகிறோம். எனது தலைமையில் நாம் பெற்ற 239 உள்ளூராட்சி சபைகளின் பலம் 110 வரை குறைவடைந்துள்ளதாக அறிகிறேன்.

எதிர்வரும் 13 நாட்களுக்குள் எம்மோடு உள்ள பல உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இல்லாமல் போகும் நிலையே உருவாகியுள்ளது.

இதற்கு என்ன செய்வதென தனது தலைக்கு ஒன்றுமே தோன்றவில்லை எனத் தெரிவித்த பசில் இந்த கேமில் தோற்றால் நாம் எமது பயணத்தின் முடிவை சந்திப்போம் எனச் சொன்னவர் உங்களுக்கு செய்ய ஏதாவது தோன்றினால் யோசித்து சொல்லுங்கள் என சந்திப்பின் இறுதிவரை இருக்காமல் எழுந்து சென்றுள்ளார்.

No comments:
Write comments