Friday, November 29, 2019

பத்திரிக்கையாளர் கேட்ட சர்ச்சை கேள்வி-கடுப்பாகி கிளம்பிய பிரபல நடிகை!


தமிழ் சினிமாவில் களவாணி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஓவியா இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். 

இவர் களவாணி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இவரால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியவில்லை .இதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.
இதன் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர் மேலும் இவருக்காகவே ரசிகர்கள் புதிதாக ஒரு இயக்கத்தை தொடங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் மேலும் தற்போது புதிதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் அரசியல் வருகை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர் பதிலளிக்காமல் கோபமாக எழுந்து விட்டார் மேலும் இதனை தொடர்ந்து இவர் தனது சமூக வலைத்தளத்தில் அரசின் சார்பாக நடிகர் நடிகைகளிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள் என தற்போது கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

No comments:
Write comments