Wednesday, November 27, 2019

ஜனாதிபதியின் சுற்றாடலை பாதுகாக்கும் வேலைத்திட்டம் : வரிப்பத்தான்சேனையில் ஆரம்பித்து வைப்பு.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுற்றாடலை பாதுகாக்கும் வேலைத்திட்டம் இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட வரிப்பத்தான்சேனை கெபிற்றல் சந்திக்கருகில்  நேற்று (27) காலை 8:30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் பதவி ஏற்பைத் தொடர்ந்து அவரது வழிகாட்டலில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வரிப்பத்தான்சேனை கெபிற்றல் சந்தியின் இரு வீதியோர மருங்குகளும், அண்மித்த கடைச் சுற்றுச் சூழல்களும் சுத்தம் செய்யப்பட்டன.

தமணை பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஆரம்பமான இவ்வேலைத்திட்டத்தில் தமணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, தமணைபொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு இணைப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜௌபர்,இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கலீலுல் றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர் அஹமட் அன்வர்,பொதுச் சுகாதார பரிசோதகர் றியாஸ்,பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த தமணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தொடர்ச்சியாக இச் செயற்திட்டம் பொது மக்களின் அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுமெனவும்,இவ்வேலைத்திட்டத்திற்கு இறக்காமம் பிரதேச சபை,இறக்காமம் பிராந்திய சுகாதார நிலையம்,அரச பொது நிறுவனங்கள் என்பவற்றின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படுமென்று  தெரிவித்ததுடன் கடைச் சொந்தக்காறர்கள்,வீட்டுரிமையாளர்கள் தமது இடங்களையும் சுற்று சூழலையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் தமணை பொலிஸ் குழுவினர் நடைபவனியாக ஒவ்வோரிடத்திற்கும் சென்று பொதுமக்களுக்கு தெளிவூட்டல்களையும் மேற்கொண்டனர்.




No comments:
Write comments