Friday, November 8, 2019

ஜப்பான் கிராமம் ஒன்றில் விழுந்த 200 கிலோ அமெரிக்க குண்டால் பெரும் பரபரப்பு!



அமெரிக்க பயிற்சி விமானமொன்றிலிருந்து ஜப்பான் நகரமொன்றில் திடீரென விழுந்த பாரிய குண்டால் அந்த கிராமமக்களிடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள மி சாவா என்ற பகுதியில் இராணுவ பயிற்சி தளத்தை ஜப்பானின் அனுமதியுடன் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. இங்கிருந்து அமெரிக்க ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று f-16 என்ற இராணுவ விமானத்தில் இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக 200 கிலோ எடை கொண்ட குண்டு ஒன்று ஒரு கிராமத்தின் மீது விழுந்தது. ஆனால் அந்த குண்டு டம்மி குண்டு என்பதால் வெடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் குண்டு விழுந்த பகுதியில் அந்த கிராமத்திலுள்ள மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். இதனை அடுத்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கிராம மக்களிடம் சென்று அது டம்மி கொண்டுதான் என்றும் அதனால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறி விளக்கம் அளித்த பின்னரே அந்த கிராமத்தினர் சமாதானம் அடைந்தனர்

No comments:
Write comments