Thursday, October 24, 2019

பெண் ஒருவர் மர்ம மரணம்! பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளியான விபரம்!


கலேவலை பத்தகொலகால்ல பகுதியில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
65 வயதுடைய குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments