Wednesday, October 23, 2019

சிறிலங்கா குண்டுவெடிப்பில் பார்வையை இழந்த பெண்ணிற்கு உலகில் கிடைத்த பெரும் அங்கிகாரம்!


உலகளாவிய ரீதியில் மற்றவர்களிற்கு முன்மாதிரியான மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் 2019 ஆம் ஆண்டிற்கான பி.பி.சியின் பட்டியலில் சிறிலங்காவின் முன்னணி வடிவமைப்பாளர் நயன ஆச்சார்யா பீரிஸ் இடம்பிடித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டில் ஒரு குண்டு குண்டுவெடிப்பில் தனது பார்வையை இழந்தார். வங்கியில் பணிபுரிந்த அவர், வீடு திரும்பும்போது குண்டுவெடிப்பில் சிக்கினார். இதனால் வேலையை ழந்தார்.
ஆனால் கடுமையான முயற்சி செய்து ஆடை வடிவமைப்பாளராக மாறினார்.
அப் & கம்மிங் ஃபேஷன் டிசைனர் போட்டியில் இறுதிப் போட்டிக்கும் முண்னேறியிருந்தார்.
இப்போது ஆடைத் தொழிற்சாலைகளில் ஆடைவடிமைப்பு, தன்னம்பிக்கை பேச்சாளரென உள்ளார்.

No comments:
Write comments